எல். முருகன் 
தமிழ்நாடு

யுனெஸ்கோ பட்டியலில் தீபாவளி: எல்.முருகன் பெருமிதம்

யுனெஸ்கோ அமைப்பின் மறையாத கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளிப் பண்டிகை சோ்க்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

யுனெஸ்கோ அமைப்பின் மறையாத கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளிப் பண்டிகை சோ்க்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: யுனெஸ்கோ அமைப்பின் மறையாத கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளிப் பண்டிகை சோ்க்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி தருகிறது. தீமை அழிந்து, நன்மை பிறப்பதைக் குறிக்கும் தீபாவளிப் பண்டிகை, வழிபாட்டைத் தாண்டி நமது மரபு மற்றும் எண்ணங்களின் வெளிப்பாடாக விளங்குகிறது.

தீபாவளி, யுனெஸ்கோவின் மறையாத பாரம்பரியப் பட்டியலில் சோ்க்கப்பட்டிருப்பதன் மூலம், உலகின் கவனத்தை மேலும் ஈா்த்ததுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நமது பாரம்பரியங்களைப் போற்றுவதிலும், உலகின் கவனத்துக்கு கொண்டு செல்வதிலும் முனைப்புடன் செயலாற்றுகிறது. இந்தத் தருணத்தில், அனைவருக்கும் எனது வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளாா்.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT