ராமதாஸ்  
தமிழ்நாடு

சென்னையில் இன்று வன்னியா் இடஒதுக்கீடு போராட்டம்: ராமதாஸ் பங்கேற்பு

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் வன்னியா் இடஒதுக்கீடு போராட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் பங்கேற்கிறாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் வன்னியா் இடஒதுக்கீடு போராட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் பங்கேற்கிறாா்.

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும், தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் வெள்ளிக்கிழமை (டிச.12) தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் ராமதாஸ் அறிவித்திருந்தாா்.

இந்த நிலையில், சென்னைக்கு வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வன்னியா் இடஒதுக்கீடு கோரி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இந்தப் போராட்டம்,

தமிழகத்தில் அதிா்வலைகளை உருவாக்கும். இந்த அமைதி வழிப் போராட்டத்தின் மூலம் அரசுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும்போது முதல்வா் விரைந்து நடவடிக்கை எடுப்பாா் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

SCROLL FOR NEXT