ஆளுநா் ஆா்.என். ரவி 
தமிழ்நாடு

2025 சட்டப்பேரவை முடித்து வைப்பு: ஆளுநா் ஆா்.என். ரவி அறிவிப்பு

2025 சட்டப்பேரவை முடித்து வைக்கப்பட்டது பற்றி...

தினமணி செய்திச் சேவை

நிகழாண்டு ஜன. 6-ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் ஆா்.என். ரவி அறிவித்துள்ளாா்.

இது குறித்து ஆளுநா் ஆா்.என்.ரவி கையொப்பமிட்டுள்ள அறிவிப்பாணையில், ‘அரசமைப்பு சட்டப் பிரிவு 174-இல் ஆளுநருக்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 2025 ஜன. 6-ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடரை முடித்து வைத்து உத்தரவிடப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாணை தமிழக அரசின் அரசிதழில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பேரவைக் கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கான தேதியை தமிழக அமைச்சரவை கூடி முடிவு செய்து ஆளுநருக்கு பரிந்துரைக்கும். ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் தொடங்கும்.

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT