ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த். 
தமிழ்நாடு

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்!

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்தைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் தனது 75 ஆவது பிறந்த நாளை நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடினார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 75வது பிறந்தாளை கொண்டாடுகிறார். தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி பறக்கும் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர் நடிகைகளும், அவரது ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி படையப்பா படமும் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், காலை முதலே அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளையொட்டி, படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார்.

ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் பின்னணி இசையுடன் விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த விடியோவில், வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து கேக் வெட்டி இயக்குநர் நெல்சன் உள்பட ஜெயிலர் 2 படக்குழுவினருடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டினர்.

Rajinikanth celebrated his birthday by cutting a cake on the set of Jailer 2!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்பின் தங்க அட்டை திட்டம்! அப்ளை நௌ என்றால் உடனே குடியுரிமை என அர்த்தமில்லையா?

அதிவேக இரட்டைச் சதத்தை தவறவிட்ட சூர்யவன்ஷி..! ரசிகர்கள் ஏமாற்றம்!

வலுவான மனஉறுதியைக் கொண்டவர்கள் துலா ராசியினர்!

ஓய்வு முடிவை திரும்ப பெற்ற வினேஷ் போகத்! மீண்டும் ஒலிம்பிக் களத்தை நோக்கி.!

இந்தியாவுக்கு எதிரான ஆஸி.யின் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்கா!

SCROLL FOR NEXT