மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற டிச. 15 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற டிச. 15 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வரும் அமித் ஷா, நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி விரிவாக்கம், தேர்தல் பணிகள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரும் வாரத்தில் தில்லி செல்லத் திட்டமிட்டுள்ளார். அதுபோல முன்னாள் தலைவர் அண்ணாமலையும் சமீபத்தில் தில்லி சென்று அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். முன்னதாக ஓபிஎஸ் - அமித் ஷா சந்திப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | மும்பை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவியை துறந்தவர்! யார் இந்த சிவராஜ் பாட்டீல்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.