ராமதாஸ் - அன்புமணி கோப்புப்படம்
தமிழ்நாடு

விருப்ப மனு பெயரில் பணமோசடி! தேர்தல் ஆணையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் புகார்!

அன்புமணி பணமோசடியில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையம், தமிழக காவல்துறை தலைமை இயக்குநரிடம் ராமதாஸ் புகார்

இணையதளச் செய்திப் பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் என்ற பெயரில், அன்புமணி பணமோசடியில் ஈடுபடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரிடம் ராமதாஸ் அளித்த புகாரில், "விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பணமோசடியில் ஈடுபடுகிறார். விருப்ப மனுக்களைப் பெற கட்சி நிறுவனராகிய எனக்கு மட்டும்தான் உரிமையுண்டு.

பாமக பெயரையோ கட்சியையோ பயன்படுத்த அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்களை டிச. 14 ஆம் தேதிமுதல் பெறப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்த நிலையில், ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க: பேரவைத் தேர்தல்: டிச. 17-ல் பாமக நிர்வாகக்குழு கூட்டம்!

PMK Founder Ramadoss filed complaint against Anbumani involved in money fraud

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT