திருநெல்வேலியில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை டிச. 21-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.
தமிழகத்தின் 3, 200 ஆண்டு கால வரலாற்றை பறைசாற்றும் வகையில், ரூ.56 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், ரெட்டியார்பட்டி அருகேயுள்ள குலவணிகர்புரம் கிராமத்தில் ரூ.56.60 கோடியில் பொருநை அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் டிச. 21-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
தற்போது திருநெல்வேலியில் அமைக்கப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகத்தில், தாமிரவருணி நதிக்கரையில் அமைந்த தமிழர்களின் நாகரிகத் தொன்மையை விளக்கும் வகையில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த அரும்பொருள்களை அழகுறக் காட்சிப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வரும் டிச. 21ஆம் தேதி பொருநை அருங்காட்சியகத்தை திறந்துவைத்துப் பாா்வையிடும் முதல்வா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் ரூ.200 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய விரிவாக்க கட்டடத்தையும் அவர் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளார்.
இது குறித்து அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிட பேசுகையில், ”மொத்தம் 97% பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள உள் அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிதித்துறையின் முதன்மைச் செயலாளர் இந்தத் திட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதாகவும், பணிகளை விரைந்து முடித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வரும் டிசம்பர் 21ஆம் தேதி பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கவுள்ளார்” என்றார்.
இதையும் படிக்க: தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்! - பாஜக அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.