கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு தொடர்பாக...
கீழடியில் ரூ. 24.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 13) திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 67,348 சதுர அடி பரப்பளவில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற கீழடியில் அகழாய்வுகளின்போது, கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த அருங்காட்சியத்துக்கு வந்து தொல்பொருள்களை பாா்வையிட்டுச் செல்கின்றனர்.
மேலும், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடங்களை திறந்தவெளி அருங்காட்சியமாக மாற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில், இந்த அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட திறந்தவெளி அருங்காட்சியம் முன் அலங்காரத் தோரண வாயிலும், அருங்காட்சியகத்தைப் பாா்வையிட வரும் பார்வையாளர்கள் நின்று சுய படம் எடுத்துக் கொள்ள ‘கீழடி நம் தாய்மடி’ என்ற வாசகத்துடன் தென்னை மரத்துடன் கூடிய சுய பட மையமும் தொல்லியல் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன.
Chief Minister MK Stalin inaugurated the open-air museum in Keezhadi today (Feb. 13) at a cost of Rs. 24.30 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.