திருவையாறு எம்எல்ஏ கார் மோதி விவசாயி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாடு நடுத்தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (50). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளார். மகன் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வரும் நிலையில், இவர் தனது சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் விவசாய வேலை காரணமாக வயலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தஞ்சையில் இருந்து வந்த திமுக மத்திய மாவட்ட செயலரும் - திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினருமான துரை.சந்திரசேகரின் கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து தகவலறிந்த ஒரத்தநாடு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் துரை. சந்திரசேகரன் மற்றொரு காரில் புறப்பட்டுச் சென்றார். விபத்தை ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டு ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.