தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.16) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்றைய மழை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தூத்துக்குடி முதல் டெல்டா வழியாக சென்னை வரை கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்கள், தென் தமிழகத்திலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யக் கூடும். மாஞ்சோலை பகுதியில் மழை இருக்கும்.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் எதிர்பாராத திடீர் மழை பெய்யக்கூடும். ஆனால் பெரிய அளவில் மழை இருக்காது. ரசிக்கக்கூடிய இதமான மழையாக இருக்கும். இந்த இரண்டு நாள்களும் இரவு நேரத்தில் வெப்பநிலை சற்று அதிகரிக்கும், அதன்பிறகு மீண்டும் குளிர் நாள்கள் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.