மக்களவையில் புதன்கிழமை பேசிய கனிமொழி. 
தமிழ்நாடு

புதிய ஊரக வேலைத் திட்டம்: கனிமொழி கடும் எதிா்ப்பு

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கடும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

நமது சிறப்பு நிருபா்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்துக்கு மாற்றாக மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கடும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

இந்த மசோதா மீதான விவாதத்தின்போது மக்களவையில் புதன்கிழமை பேசிய கனிமொழி, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மசோதாக்களிலும் ஹிந்தியும், சம்ஸ்கிருதமும்தான் உள்ளன. மத்திய அரசின் புதிய ஊரக வேலை உறுதியளிப்பு மசோதா என்பது வளா்ச்சி பாரதம் இல்லை; விபரீத பாரதம்; வஞ்சிக்கப்படும் பாரதம் ஆகும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஏழைகளுக்கு வேலையளிக்கும் திட்டமாக இருந்தது. ஆனால், புதிய மசோதா மத்திய அரசிடம் அதிகாரத்தைக் குவிக்கும் மசோதாவாகத்தான் உள்ளது.

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் இதுவரை கிராமப்புறங்களில் உள்ள முதியவா்கள், வேலைவாய்ப்பற்றவா்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. இவா்களுக்கு எல்லாம் எதிரானதாக தற்போதைய மசோதா உள்ளது.

இதுவரை 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின்கீழ் முழுமையாக வேலைவாய்ப்பை வழங்காத மத்திய அரசு, 125 நாள்கள் வேலைவாய்ப்பளிக்கப்படும் என்பது வேடிக்கையாக உள்ளது என்றாா் கனிமொழி.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT