தவெக தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கம்பத்தில் ஏறிய தொண்டரை, பேச்சை நிறுத்திவிட்டு அவர் கண்டித்தார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு நடிகர் விஜய் உரையாற்றி வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசலுக்குப் பிறகு முதல்முறையாக தமிழகத்தில் கூட்டம் நடைபெறுவதால், தவெக கட்சி மற்றும் காவல்துறை தரப்பில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விஜய் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கிருந்த உயரமான கம்பம் ஒன்றில் தவெக தொண்டர் ஒருவர் ஏறியதால், தனது பேச்சை நிறுத்து அவரை இறங்குமாறு விஜய் வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் கம்பத்தில் இருந்து இறங்கும்வரை விஜய் தனது பேச்சை தொடரவில்லை. அவர் கம்பத்தில் இருந்து இறங்கியவுடன் வாகனத்தில் நின்றவாறு அவருக்கு முத்தம் கொடுத்தார்.
இதையடுத்து பேசிய விஜய், ஈரோடுக்கு திமுக கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு, நிறைவேற்றாத தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.