திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (டிச.21) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சர்பார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.