பணி நிரந்தரம் உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 3-ம் நாளாக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு செவிலியர்கள் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை அவர்களைக் கைது செய்து விடுவித்த நிலையில் அவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் செவிலியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.