திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் ஆலோசனைப் பற்றி...
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான திமுக தோ்தல் அறிக்கையை தயாரிக்கும் குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றது.
கடந்த வாரம் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
இந்த குழுவில் திமுக செய்தித் தொடா்புச் செயலா் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சா்கள் கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆா்.பி.ராஜா உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துகளைக் கேட்டு திமுக தோ்தல் அறிக்கையை தயாரிக்கவுள்ளது.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
DMK election manifesto drafting committee: Meeting held under the leadership of Kanimozhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.