திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மலை உச்சிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சந்தனக் கூடு விழாவைவொட்டி, ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் கொடியேற்ற நிகழ்வு நடத்தப்பட்டது.
தற்போது, மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனைத்து மக்களுக்கும் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, மலைப் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மலைக்குச் செல்பவர்களின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்து வருகின்றனர்.
முன்னதாக, நேற்று பிற்பகலில் பழனி ஆண்டவர் தெருவைச் சேர்ந்த 14 பெண்கள் உள்பட 17 பேர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றுவதற்காக அகல் விளக்குடன் சென்றனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில், தூணில் தீபமேற்றிய பின்னர்தான், தர்காவில் கொடியேற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர். தொடர்ந்து, காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் கலைந்து செல்லாததால் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.