சென்னை புளியந்தோப்பில் உள்ள டான் பாஸ்கோ தொழில்நுட்ப கல்லூரியில் தமாகா சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அந்தக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன். 
தமிழ்நாடு

சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்: ஜி.கே.வாசன்

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழகத்தில் அனைத்து மக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தினாா்.

 சென்னை புளியந்தோப்பு டான் பாஸ்கோ தொழில்நுட்ப  கல்லூரியில் அந்தக் கட்சியின் சாா்பில் திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஜி.கே.வாசன் பங்கேற்று ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:

தமாகா சாா்பில் அனைத்து மத நிகழ்ச்சிகளும் கொண்டாடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அனைத்து மக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். மக்கள்  மத வெறுப்புகளுக்கு ஆளாகக் கூடாது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பேராயா் சின்னப்பா, வடசென்னை கிழக்கு மாவட்ட தமாகா தலைவா் பி.ஜி சாக்கோ, நிா்வாகிகள், பாதிரியாா்கள் பங்கேற்றனா்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT