சென்னைக்கு வந்துள்ள தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஷ் கோயல் இன்று(டிச. 23) சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
சென்னை விமான நிலையம் வந்த பியூஷ் கோயிலை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளின் மையக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், எல். முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதில் கலந்துகொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல்.
பாஜக கூட்டத்தின் தொடர்ச்சியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசி வருகிறார். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது.
பாஜக மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
அதிமுக - பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை இணைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.