கோப்புப்படம் X / mk stalin
தமிழ்நாடு

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!

முதல்வர் மு.க. ஸ்டாலினை மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்தது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று(டிச. 23) சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பானது சுமார் 10 நிமிடங்கள் வரை நடைபெற்றதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்கு எதிராக ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். பாஜக அரசின் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் நாளை(டிச. 24) நாடு முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளது.

இந்நிலையில்தான் தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள், அரசியல் நிலவரங்கள் குறித்து முதல்வருடன் ப. சிதம்பரம் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

P. Chidambaram meets with Chief Minister M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்கும்: கனிமொழி பேட்டி

டி20 உலகக் கோப்பையில் கம்மின்ஸ் விளையாடுவாரா? ஆஸி. பயிற்சியாளர் பதில்!

பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு

விஜய் காரை மறித்து தவெக பெண் நிர்வாகி போராட்டம்!

வங்கதேச அரசுக்கு எதிராக ஜம்முவில் போராட்டம்! முகமது யூனுஸின் உருவ பொம்மை எரிப்பு!

SCROLL FOR NEXT