பாலியல் தொல்லை கொடுத்த காவலர் 
தமிழ்நாடு

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் பணியிடை நீக்கம்!

கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக..

இணையதளச் செய்திப் பிரிவு

ஓடும் ரயிலில் கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து கோவைக்கு வந்த கல்லூரி மாணவி ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளித்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சேக் முகமத். இவர் பாதுகாப்புப் பணிக்காகச் சென்னை சென்றுவிட்டுக் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையிலிருந்து கோவைக்கு வரும் இன்டர்சிட்டி ரயிலில் வந்தார். இவரது அருகே சென்னையில் சட்டக் கல்லூரி பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி கோவைக்கு வந்தார். அந்த ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டு இருந்தது.

அப்பொழுது அருகே அமர்ந்து இருந்த காவலர் சேக் முகமத் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது செல்போனில் விடியோ பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் அவரை காவல் துறையினர் ரயிலிலிருந்து இறக்கி விட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஆர் எஸ் புரம் காவல் நிலையத்திலிருந்து சேக் முகமத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

The incident of a police officer being suspended from duty for sexually harassing a college student from Coimbatore on a moving train has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் விஜய்யின் ரெட்ட தல பட முன்னோட்ட விடியோ!

ஹரியாணாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிலை! அமித் ஷா திறந்து வைத்தார்!

அமமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு? TTV தினகரன் விளக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 24.12.25

பிரியங்காவுக்குள் ஒரு இந்திரா காந்தியை மக்கள் பார்க்கின்றனர்: ராபர்ட் வதேரா

ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்ற ஓஸ்வால் பம்ப்ஸ்!

SCROLL FOR NEXT