சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என அன்புமணி தரப்பினர் சேலம் காவல் ஆணையரக அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
சேலத்தில் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
ஜன. 29 அன்று சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என அவரது மகன் அன்புமணி தரப்பில் சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிதான் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுக்குழுவைக் கூட்டவும் அதற்கு தலைமை ஏற்கவும் தலைவர் அன்புமணியைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் அன்புமணி தரப்பில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 'கட்சியின் சார்பாக எந்த அனுமதியும் பாதுகாப்பும் நாங்கள் கோரவில்லை. கட்சியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி அனுமதி கேட்டால் அது சட்டவிரோதமானது, அதற்கு அனுமதி தர வேண்டாம். பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரையோ, அதன் கொடியையோ, அடையாளங்களையோ தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.