தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து சரத் குமார் பேசியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் சரத் குமார் பேசுகையில், "2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, மாநிலத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
அதன்பிறகுதான், தென்காசி தொகுதியில் போட்டியிடுவதா என்பது குறித்தும் முடிவு செய்யப்படும்.
தேர்தலில் நான் போட்டியிடுவதைவிட, என்னுடன் பணியாற்றியவர்கள் மற்று என்னுடன் பயணம் செய்தவர்கள் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று தனிப்பட்ட முறையில் எனக்குத் தோன்றுகிறது" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.