திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற சொன்னது பாஜக அல்ல, நீதிமன்றம் என்று மாநில துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் 21 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் பாஜக சார்பாக வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில் பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்று சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் குஷ்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டிசம்பர் 26 ஆம் தேதி யாராலும் மறக்க முடியாத நாள், அனைவரும் உறங்கிக் கொண்டு இருந்த நேரம் சுனாமி வந்ததில் அத்தனை மக்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்த நபர்களுக்கு பாஜக சார்பாக அஞ்சலி செலுத்தினோம். மேலும் கடலோரம் வாழும் மீனவ மக்களுக்கு உணவு வழங்கினோம். மீனவர்களின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடி பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மீனவர்கள் நலனுக்காக பாஜக தொடர்ந்து பாடு படும். விசிக தலைவர் திருமாவளவன் மன நிலை இதுதான். இதுவே கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடினால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா எனக் கூற முடியுமா?
இந்து மெஜாரிட்டி அதிகமாக உள்ளதால் தொடர்ந்து மண்டையில் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களது கூட்டணியில் இருப்பவர்கள் கோயிலுக்கு போவார்கள், பட்டை பூசுவார்கள், தீபம் ஏற்றுவார்கள், வீட்டில் பூஜை நடத்துவார்கள் இதையெல்லாம் நான்கு சுவற்றுக்குள் நடக்கும் மக்களுக்கு தெரியாது என நினைப்பார்கள். இந்த தேர்தலுக்கு எந்த கோயிலுக்கும் போக வேண்டாம், எந்த சர்ச், மசூதி பள்ளிவாசலிலும் திருமாவளவன் நிற்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றச் சொன்னது பாஜக அல்ல, நீதிமன்றம். தேர்தலில் போட்டியிடும் ஆசையோடு நான் கட்சிக்கு வரவில்லை. தலைவரும் கட்சியும் என்ன சொல்கிறதோ அதுக்கு நான் கட்டுப்பட்டு செயல்படுகிறேன். தேர்தலில் வாய்ப்பு கொடுப்பார்கள், பொறுப்பு கொடுப்பார்கள் என எந்த எதிர்பார்ப்போடும் நான் பாஜகவுக்கு வரவில்லை, கட்சி வளர்ச்சிக்குதான் நான் வந்துள்ளேன்.
வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. தில்லி சென்று பியூஷ் கோயலை சந்திக்க உள்ளேன். விரைவில் பாஜக மாநிலத் தலைவர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவார்கள். பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பாக வந்த கணக்குகள் வதந்தி மட்டுமே என்றார்.
State Vice President Khushbu has said that it was not the BJP that asked for lighting the lamp on Thiruparankundram Hill, but the court.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.