ஜன. 10க்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு :
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, வரும் புத்தாண்டில் ஜன. 10-ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இது குறித்து பேசிய அவர், பொங்கல் பரிசுத் தொகுப்பு தயாராக உள்ளதாகவும், தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜன. 10-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.