நாகை மாவட்டத்தின் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலப் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (டிச. 28) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளிநாட்டு, உள்நாட்டுப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில்,சரணாலயப் பகுதியில் காணப்படும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
முன்னதாக, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.