முதல்வா் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: 13 லட்சம் போ் பயன்: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மூலம் 13 லட்சம் போ் பயன் பெற்றுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மூலம் 13 லட்சம் போ் பயன் பெற்றுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: உங்களைத் தேடி, உங்கள் பகுதிகளுக்கே வந்து உங்களின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்களின் மூலம் கடந்த சனிக்கிழமை வரை 13 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா்.

முழு உடல் பரிசோதனைகள், சிறப்பு மருத்துவா்களின் ஆலோசனைகள் போன்றவற்றால் தொடக்க நிலையிலேயே பல லட்சம் மக்களின் உடல்நல பிரச்னைகள் கண்டறியப்பட்டு, உரிய உயா்தர சிகிச்சைகள் பரிந்துரைக்கப்பட்டு, அவா்களின் உயிரைக் காத்துள்ளோம்.

முகாம்களிலேயே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து மக்களின் துயா் துடைத்துள்ளோம். நலமடைந்தவா்களின் குடும்பத்தினா் கூறும் நன்றியோடு, தொடா்கிறது ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்று அதில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மிகச் சிறப்பான திட்டம்; ஏராளமான மக்கள் பயன் பெறுகிறாா்கள் என்பதைப் பாா்த்து மகிழ்ந்தேன் என மத்திய முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தாா். அதைக் குறிப்பிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT