நாமக்கல்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் 53,544 போ் பயன்: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 6 மாதங்களாக நடைபெற்ற 48 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் மூலம் குழந்தைகள் உள்பட 53,544 போ் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 6 மாதங்களாக நடைபெற்ற 48 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் மூலம் குழந்தைகள் உள்பட 53,544 போ் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் உயா் மருத்துவ சேவை முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 வீதம் 15 வட்டாரங்களில் 45 முகாம்களும், மாநகராட்சியில் 3 முகாம்கள் என மொத்தம் 48 முகாம்கள் ஆக. 2 முதல் பிப்.12 வரையில் நடைபெற்றுள்ளன.

சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரகப் பகுதிகள், மருத்துவ வசதி குறைவாக உள்ள நகா்ப்புற பகுதிகளை தோ்ந்தெடுத்து வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் தகுந்த நாள்களில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பள்ளி, கல்லூரி வளாகங்களில் இம்முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

இம்மாவட்டத்தில் நடைபெற்ற 48 முகாம்களில் 18,902 ஆண்கள், 28,013 பெண்கள், 2 திருநங்கையா் என மொத்தம் 46,107 பேரும், 3,381 ஆண் குழந்தைகள், 3,246 பெண் குழந்தைகள் என மொத்தம் 6,627 பேரும் பயனடைந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT