மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினர்.
விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை இன்று(டிச. 28) கோயம்பேட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்துக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் ஆகியோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜையில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.