செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செங்கோட்டையன் 
தமிழ்நாடு

விஜய்யின் வெற்றியை தடுக்க முடியாது: கே.ஏ.செங்கோட்டையன்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய்யின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய்யின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இளைஞா்கள் மற்றும் பெண்களின் ஆதரவு விஜய்க்கு உள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சியை காட்டிலும் ஒரு புதிய முகம் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா்.

அந்த வகையில், விஜய்தான் அடுத்த முதல்வராக வேண்டும் என தமிழக மக்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனா்.

வருகிற பேரவைத் தோ்தலில் மக்கள் துணையுடன் வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்று விஜய் ஆட்சி அமைப்பாா். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இனி வரும் காலங்களில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு கட்சியின் தொண்டா் படையை கொண்டு பாதுகாப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் கே.ஏ.செங்கோட்டையன்.

மின் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

SCROLL FOR NEXT