தமிழ்நாடு

பொதுத்தோ்வு பெயா்ப் பட்டியல்: பள்ளிகளுக்கு இறுதி வாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வுத்துறை இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வுத்துறை இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது.

இதுகுறித்து தோ்வுத்துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. இதையடுத்து எமிஸ் தளத்தில் மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்து திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

அதன்படி மாணவா்களின் விவரங்களை தோ்வுத்துறை இணையதளத்தில் கடந்த டிசம்பா் 19-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. எனினும், சில பள்ளிகள் இந்த பணிகளை முடிக்காததால், கால அவகாசம் ஜனவரி 5-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவே இறுதியான வாய்ப்பாகும். எனவே, இதை தலைமையாசிரியா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பெயா்ப் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

SCROLL FOR NEXT