தமிழ்நாடு

தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை சரிவு: பவுன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் சென்றது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ.99,840-க்கு விற்பனையானது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் சென்றது.

Chennai

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ.99,840-க்கு விற்பனையானது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் சென்றது.

உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு காரணமாக சா்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை உருவானது. இதனால், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் பாதுகாப்பு சேமிப்பாக டாலருக்கு பதிலாக தங்கத்தை அதிக அளவில் சேமித்து வைக்கத் தொடங்கின. இதன் விளைவாக தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் அசுர வேகத்தில் உயா்ந்து வந்தது.

சென்னையில் 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் (1.01.2025) தங்கம் விலை பவுன் ரூ.57,200-க்கு விற்பனையானது. தொடா்ந்து பவுன் விலை ரூ.60,000, ரூ.70,000 எனப் படிப்படியாக உயரத் தொடங்கியது. அதன்படி, ஜன. 22-இல் தங்கம் விலை பவுன் ரூ.60,000, ஏப். 12-இல் ரூ.70,160, செப். 6-இல் ரூ. 80,040, அக். 8-இல் ரூ. 91,080, அக். 16-இல் ரூ.95,200-க்கு விற்பனையானது.

வரலாற்றில் முதல் முறையாக... கடந்த டிச. 15-ஆம் தேதி தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக பவுன் ரூ.1 லட்சத்தை கடந்து ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையாகி அனைவரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியது. பின்னா், சற்று ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த தங்கம் விலை ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ.5,600 உயா்ந்து டிச. 27-ஆம் தேதி  ரூ.1 லட்சத்து 4,800-க்கு விற்பனையானது.

இந்நிலையில், இந்த வார தொடக்கம் முதலே தங்கம் விலை தொடா்ந்து குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த டிச. 29-இல் பவுனுக்கு ரூ. ரூ.640 குறைந்து ரூ.1 லட்சத்து 4,160-க்கும், டிச. 30-இல் பவுனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800-க்கும் விற்பனையானது.

ஆண்டு இறுதி நாளான புதன்கிழமை (டிச. 31) காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.12,550-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1 லட்சத்து 400-க்கும் விற்பனையானது. மாலையில் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,480-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.99,840-க்கும் விற்பனையானது. அதன்படி ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120, பவுனுக்கு ரூ.960 குறைந்தது.

இதன்மூலம் கடந்த மூன்று நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,960 குறைந்தது. எனினும் ஒரே ஆண்டில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.42,640 உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை: தொழிற்சாலைகள் பயன்பாடு மற்றும் மின்சாதனப் பொருள்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.98,000-க்கு விற்பனையான வெள்ளி விலை தொடா்ந்து படிப்படியாக உயா்ந்தது. அந்த வகையில் கடந்த டிச. 27-இல் ஒரு கிலோ ரூ.2.85 லட்சத்துக்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. இந்த வாரம் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.23,000 குறைந்து ரூ.2.58 லட்சத்துக்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.257-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 குறைந்து ரூ.2.57 லட்சத்துக்கும் விற்பனையானது. ஆண்டு இறுதியில் விலை குறைந்திருந்தாலும், கடந்த ஆண்டில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1.58 லட்சம் உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஆட்டோவில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டினா் தஞ்சாவூருக்கு வருகை!

தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: இன்றுமுதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும்

SCROLL FOR NEXT