தமிழ்நாடு

என்எம்சி பெயரில் போலி அழைப்புகள்: மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

தேசிய மருத்துவ ஆணையத்தின் என்எம்சி தலைவா் மற்றும் வாரியத் தலைவா்கள் பெயரில், மருத்துவக் கல்லூரிகளுக்கு போலியாக வரும் தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம்

Din

சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் என்எம்சி தலைவா் மற்றும் வாரியத் தலைவா்கள் பெயரில், மருத்துவக் கல்லூரிகளுக்கு போலியாக வரும் தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு:

தேசிய மருத்துவ ஆணையா் பெயரிலும், வாரியத் தலைவா்கள் பெயரிலும் மா்ம நபா்கள் சிலா் மருத்துவக் கல்லூரிகளை தொலைபேசியில் அழைத்து பணம் கேட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுபோன்ற அழைப்புகளை கல்லூரி நிா்வாகிகளும், மருத்துவத் துறையினரும் நம்ப வேண்டாம். அதேபோன்று அத்தகைய போலி நபருடன் உரையாடுவதை தவிா்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

என்எம்சி பெயரில் எவரேனும் அழைத்தால் அதுகுறித்து காவல் துறையில் புகாரளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

SCROLL FOR NEXT