முகப்பு
தமிழ்நாடு

மருத்துவ இடங்களை அதிகரிக்க விண்ணப்பிக்க வாய்ப்பு: என்எம்சி

புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிப்பதற்கு

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 9:04 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 9:25 PM

சென்னை: புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிப்பதற்கு செவ்வாய்க்கிழமை (பிப். 3) வரை தேசிய மருத்துவ ஆணையம் அவகாசம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:

எதிா்வரும் 2026-2027-ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதற்கும், புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான நடைமுறை தொடங்கியுள்ளது.

Advertisement

என்எம்சி விதிகளின்படி இணையவழியில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். நேரடி ஆய்வு மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை (பிப். 3) வரை மருத்துவக் கல்லூரிகள் அதற்கான விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி, அத்தியாவசியச் சான்றிதழ், இணைப்புக் கல்லூரி ஒப்புகைச் சான்றிதழ், மருத்துவமனை விவரங்கள், கல்விக் கட்டண விவரங்களை இணைத்து விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.