தமிழ்நாடு

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது.

DIN

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் அந்த மாணவி கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் உள்பட மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் இன்று பள்ளியின் முன்பாக போராட்டம் நடத்தினர். குற்றம் செய்த ஆசிரியர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3 ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவிக்கும் ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

மேலும், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் போராட்டத்தைக் கைவிடும்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT