கைது 
தமிழ்நாடு

கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!

கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டது பற்றி...

DIN

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நின்றிருந்த 18 வயது மேற்கு வங்க சிறுமி ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் இரண்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் ஒருவரை தேடும் பணியில் தனிப்படை காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமி, சேலத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், மாதவரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு திங்கள்கிழமை பேருந்து மூலம் வந்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து மாதவரம் செல்லும் பேருந்துக்காக திங்கள்கிழமை இரவு காத்திருந்தார்.

அப்போது சிறுமியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிய சிலர் ஓடும் ஆட்டோவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தாம்பரம் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, சிறுமியில் அலறல் சப்தம் கேட்டு காவல்துறைக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆட்டோவை துரத்திய நிலையில், அந்த சிறுமியை நடுரோட்டில் இறக்கிவிட்டு ஆட்டோவில் இருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் தாம்பரம் காவல்துறையினர் ஈடுபட்டார்.

இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் முத்துதமிழ்ச்செல்வம் மற்றும் தயாளன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட தயாளன் சரித்தர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிரா

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்!

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழப்பு

உரிய நேரத்தில் வாக்காளா் பட்டியல்களை சில கட்சிகள் ஆராயவில்லை: தோ்தல் ஆணையம்

ஜம்மு - காஷ்மீா் பெருவெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT