கோப்புப்படம்  
தமிழ்நாடு

பொறியியல் பணி: இரு ரயில்கள் ரத்து

காட்பாடி யார்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஒரு ரயில் பகுதியளவிலும், 2 ரயில்கள் முழுமையாகவும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வேலூர் மாவட்டம், காட்பாடி யார்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஒரு ரயில் பகுதியளவிலும், 2 ரயில்கள் முழுமையாகவும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலூர் மாவட்டம் , காட்பாடி யார்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -காட்பாடி பயணிகள் ரயில்(வ.எண்.66026) பிப்ரவரி 10,12,14 ஆகிய தேதிகளில் வேலூர் கண்டோன்மென்ட் -காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை மட்டுமே இயக்கப்படும்.

அமெரிக்காவில் 10 பேருடன் சென்ற விமானம் மாயம்

இதுபோன்று சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் சென்னை கடற்கரை -திருவண்ணாமலை பயணிகள் ரயில்(வ.எண்.66033), பிப்ரவரி 10,12,14 ஆகிய தேதிகளிலும், திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை -தாம்பரம் பயணிகள் ரயில்(வ.எண்.66034), பிப்ரவரி 11,13,15 ஆகிய தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னாலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு!

வீட்டில் பதுங்கிய 2 மரநாய்கள் மீட்பு

சென்னையில் 2,000 விநாயகா் சிலைகள் கடலில் கரைப்பு

சின்னா் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிா்ச்சித் தோல்வி!

SCROLL FOR NEXT