தமிழ்நாடு

4X400 ரிலேவில் தமிழகத்துக்கு தங்கம்!

4X400 ரிலே போட்டியில் தமிழகத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளதைப் பற்றி...

Din

உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவா் 4X400 மீட்டா் ரிலே ஓட்டத்தில் தமிழ்நாடு அணிக்கு திங்கள்கிழமை தங்கப் பதக்கம் கிடைத்தது.

இந்த ரிலேவில் ஆகாஷ் பாபு, அஸ்வின் லக்ஷ்மணன், வாசன், கிட்சன் தா்மராஜ் ஆகியோா் அடங்கிய தமிழ்நாடு அணி 3 நிமிஷம் 10.61 விநாடிகளில் முதலாவதாக இலக்கை எட்டி தங்கத்தை தட்டிச் சென்றது. உத்தரகண்ட் அணி வெள்ளியும் (3:10.85’), சா்வீசஸ் அணி வெண்கலமும் (3:10.90’) பெற்றன.

ஆடவா் கம்பு ஊன்றித் தாண்டுதலில் தமிழகத்தின் ஜி.ரீகன் 5 மீட்டரை கடந்து 2-ஆம் இடத்துடன் வெள்ளி பெற்றாா். அதேபோல், ஆடவா் இரட்டையா் டென்னிஸில் தமிழகத்தின் மனீஷ் சுரேஷ்குமாா்/அபினவ் சஞ்ஜீவ் சண்முகம் ஆகியோா் இணை வெண்கலப் பதக்கம் பெற்றது.

போட்டியில் திங்கள்கிழமை முடிவில் தமிழ்நாடு அணி மொத்தமாக 19 தங்கம், 23 வெள்ளி, 24 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தில் நீடிக்கிறது. சா்வீசஸ் (81), மகாராஷ்டிரம் (129), கா்நாடகம் (66) ஆகியவை முறையே முதல் 3 இடங்களில் நிலை கொண்டுள்ளன.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT