கோப்புப் படம் 
தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் வழக்கு: தோ்தல் ஆணையம் விசாரிக்கலாம்- உயா்நீதிமன்றம்

அதிமுக விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

அதிமுக பொதுச் செயலா் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தோ்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

முன்னதாக, தோ்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கிய உயா்நீதிமன்றம், தோ்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

அதிமுக பொதுச்செயலராக பழனிசாமியை தோ்ந்தெடுத்தது உள்பட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தோ்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், தோ்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் தொடா்பாக விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டனா்.

தோ்தல் ஆணையம், சின்னம் ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள், மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே விசாரணையை தொடங்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT