மதுப்புட்டிகளை கடத்திவந்தவர் 
தமிழ்நாடு

நூதன முறையில் மதுப்புட்டிகள் கடத்தியவர் விழுப்புரத்தில் கைது!

நூதன முறையில் உடலில் ஒட்டி மதுப்புட்டிகளை கடத்தியவர் கைது..

DIN

புதுச்சேரி மாநிலத்தின் மதுப்புட்டிகளை நூதன முறையில் உடலில் ஒட்டி கடத்தி வந்தவர் சனிக்கிழமை விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சண்முகம், சதீஷ் மற்றும் காவலர்கள், சனிக்கிழமை விழுப்புரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் ரகசிய கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய முறையிலிருந்த நபரைப் பிடித்து, மதுவிலக்கு அமல் பிரிவுக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தியபோது, நூதன முறையில் உடல் முழுவதும் புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை ஒட்டிக்கொண்டு, பேருந்தில் விழுப்புரத்துக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர், விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த பாவாடை மகன் நாகமணி (40) எனத் தெரிய வந்தது. இதையடுத்து 90 மில்லி அளவு கொண்ட 100 மதுப்புட்டிகளும், 150 மில்லி அளவு கொண்ட 25 பிராந்தி மதுப்புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நாகமணியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் நாளை 100 மாவோயிஸ்டுகள் சரண்: துணை முதல்வர் விஜய் சர்மா!

2025-க்கான புகைப்படக் கலைஞர் விருது பெறும் இந்தியர் ராகுல் சச்தேவ்!

உலகக் கோப்பை: ஆஸி.க்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

மனோஹரிதா... ருக்மிணி வசந்த்!

கண்கள் பட்டதும் நினைப்பு வந்தது... ஹெபா படேல்!

SCROLL FOR NEXT