முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவை நாடி பிற கட்சிகள் வரும்: எடப்பாடி பழனிசாமி

அடுத்த தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகும்: எடப்பாடி பழனிசாமி

Updated On : 16 பிப்ரவரி, 2025 at 5:41 PM
பகிர்:

அடுத்த தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவாகும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர்கள் - இளம்பெண்கள் பாசறையின் லட்சிய மாநாட்டுக் கூட்டம் இன்று(பிப். 16) வேலூரில் நடைபெற்றது.

இந்த நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(பிப். 16) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: "2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம்.

அதிமுகவைப் பற்றி பேச முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு தகுதியில்லை. திமுக கூட்டணி பலத்தை நம்பியுள்ளது. ஆனால், அதிமுக யாரை நம்பியும் இல்லை, மக்களை நம்பியுள்ளது. தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் கொண்ட கட்சி அஇஅதிமுக” என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, “நாங்கள் யாரையும் நாடிச் செல்வது கிடையாது. எங்களை நாடி மற்றவர்கள் வருவார்கள். ஓட்டுகள் பிரிக்கப்படாமல் இருக்கவே கூட்டணி அமைக்கிறோம். அந்த வகையில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வலிமையான, மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமையும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.