தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் - கோப்புப்படம் 
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

DIN

கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே சுண்டகிரியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

லாரி ஒன்று பழுதாகி நின்றதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மணி நேரம் 5 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் நின்றிருந்தன.

சுண்டகிரியில் சாலையின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நின்றிருந்தன. மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், சர்வீஸ் சாலையில் சென்ற லாரி ஒன்று திடீரென பழுதாகி நின்றதால், எதிரெதிரே வந்த வாகனங்கள் ஒன்றுக்கு ஒன்று வழி விட முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதியில் லாரி ஒன்று பழுதாகி நின்றதால் கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூரு செல்லும் வாகனங்களும், பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வாகனங்களும் செல்ல முடியாமல் முற்றிலும் போக்குவரதுது பாதிக்கப்பட்டது.

போக்குவரத்தை சீர் செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறை, காவல்துறை, போக்குவரத்துக் காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்டமாக பழுதான லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்திய நிலையில் மெல்ல போக்குவரத்தை சீர் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளச்சேரி - கடற்கரை இரவுநேர ரயில் இன்று ரத்து

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

காஸா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!

வால்பாறை ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT