மூணாறில் விபத்து  
தமிழ்நாடு

மூணாறில் நாகர்கோவில் கல்லூரி பேருந்து விபத்து: 3 பேர் பலி!

மூணாறில் நாகர்கோவில் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

DIN

மூணாறு: மூணாறுக்கு சுற்றுலா சென்ற நாகர்கோவில் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 மாணவிகள் மற்றும் மாணவர் ஒருவர் பலியானதாக உறுதிசெய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமான மூணாறில் நாகர்கோவிலிலிருந்து கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த பேருந்து விபத்தில் கல்லூரி மாணவி மற்றும் ஆசிரியர் ஒருவர் பலியானதாகவும். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூணாறிலிருந்து வட்டவாடகைக்குச் செல்லும் சாலையில் எக்கோ பாயிண்ட் பகுதியில் அதிவேகமாக வந்த பேருந்து விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த பேருந்தில் பயணித்த பல மாணவர்கள் காயங்களுடன் மூணாறு டாடா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் தொடர் சிகிச்சை தேவைப்பட்டவர்கள், தேனி மருத்துவக் கல்லூரி, கோலஞ்சேரி, கோட்டயம் உள்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இயங்கி வரும் கல்லூரியின் மாணவ, மாணவிகள் சென்ற சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகி, மாணவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆம்புலன்ஸ்கள் வரவைக்கப்பட்டன.

இந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT