தமிழ்நாடு

முதல்வரை அண்ணாமலை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம்: மா.சுப்பிரமணியன்

முதல்வர், துணை முதல்வரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

DIN

முதல்வர், துணை முதல்வரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசையும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் குற்றம்சாட்டி பேசி வருகிறார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக அமைச்சர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை அண்ணாமலை தொடர்ந்து ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம். அவர் நாவடக்கம் அற்றவர், அநாகரீகமானவர் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் நிலைக் கண்ணாடி முன்நின்றால் தன்னுடைய தற்குறித்தனங்கள் ஒவ்வொன்றாய் வரிசைக்கட்டி நிற்கும்.

கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் ஆதரவாக அரசியல் செய்து வரும் அண்ணாமலைக்கு திராவிட மாடல் பற்றி பேசத் தகுதியில்லை.

நீட், புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு. மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது என அனைத்திலும், தமிழக மக்கள் விரோத அரசியல் செய்யும் அண்ணாமலை தொடர்ந்து செய்யும் கேலிக்கூத்து நடவடிக்கைகள் அளவின்றி போய்கொண்டிருக்கிறது.

திடீரென்று செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லி ஷூ போட்டுகொண்டு வலம் வருவது, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் கண்டு நாடே எள்ளி நகையாடுகிறது.

அண்ணாமலை ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பது நிதர்சனம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாள பிரதமருடன் வெளியுறவுச் செயலா் சந்திப்பு: இருதரப்பு உறவை மேம்படுத்த ஆலோசனை!

திருமலையில் உறியடி உற்சவம்

ராணுவ பயிற்சியில் மாற்றுத்திறனாளியானோா் விவகாரம்: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

விளையாட்டு வீரா்களுக்கு பிரத்யேக பாா்வை அளவியல் ஆய்வகம்

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்! பிரதமா் மோடி வேண்டுகோள்

SCROLL FOR NEXT