தேசிய கல்விக் கொள்கை குறித்து மு.க. ஸ்டாலின் பேச்சு 
தமிழ்நாடு

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் பேச்சு

DIN

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் வேட்டு வைக்கும் திட்டம்தான் தேசியக் கல்விக் கொள்கை. அதில், ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், ரூ.10 ஆயிரம் கோடி பணம் கிடைக்கும் என்றாலும் அதில் கையெழுத்திட மாட்டேன். கையெழுத்திடும் அந்த பாவத்தை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்ய மாட்டான்.

நாங்கள் இந்தி மொழிக்கு எதிரி அல்ல, அதைப் படிப்பதை தமிழ்நாடு ஒரு போதும் தடுப்பதில்லை. தமிழன் என்று ஒரு இனம் உண்டு. அவர்களுக்கு என்று ஒரு குணம் உண்டு என்பதை தமிழ்நாடு காட்டிவிடும். எங்கள் மொழியை அழிக்க நினைத்தால், ஆதிக்கம் செலுத்த நினைத்தால் விட மாட்டோம்.மொழித் திணிப்புக்கு எதிராக 80 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம்.

சமஸ்கிருதத்துக்கு ரூ.1488 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8 கோடி பேர் பேசும் தமிழுக்கு ரூ.74 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் அந்த இலக்கை மையமாக கொண்டு, கொரோனா காலத்தில் கற்றல் இடைவெளி, குறைபாடு ஏற்பட்டதை மனதில் கொண்டு, உருவாக்கப்பட்டதுதான் இல்லம் தேடிக் கல்வி திட்டம். 38 மாவட்டங்களில் 1 இலட்சத்து 8 ஆயிரம் தன்னார்வலர்களால் 30 இலட்சம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்த திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

80 ஆயிரத்து 138 கல்வி மையங்கள் தொடங்கப்பட்டது. அனைவரையும் பள்ளிகளை நோக்கி வரவைக்கும் கல்வியில் சிறந்த திட்டமாக இது தொடங்கப்பட்டது. அதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றியும் காட்டியது தான் இந்தத் திட்டம்.

புதிய செயலி மூலமாக பள்ளி செல்லாத 1 இலட்சத்து 88 ஆயிரத்து 487 குழந்தைகள் கண்டறியப்பட்டு உரிய வகுப்பில் சேர்த்து பயிற்சிகள் வழங்கியிருக்கிறோம். பள்ளிகளில் படிக்கும் 16 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் “எண்ணும் எழுத்தும் இயக்கம்” தொடங்கப்பட்டிருக்கிறது.

கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இது போன்ற பல்வேறு திட்டங்களின் மூலமாக, பள்ளிக் கல்வி செழுமை பெற்று வருகிறது.

இதையெல்லாம் சொல்வது யாரு? மத்திய அரசின் அறிக்கைகள்! மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை மனதார பாராட்டி இருக்கிறார்கள். ஒரு பக்கம் நம்மை பாராட்டினாலும், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள் என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு: 1,090 சிறப்பு பேருந்துகள்

திமுக முன்னாள் எம்.பி.க்கு எதிரான வழக்கு: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

கல்லூரி மாணவா்களுக்கு பாலின உளவியல் விழிப்புணா்வு

மேகாலயத்தின் ஒரே காங்கிரஸ் எம்எல்ஏ ஆளுங்கட்சியில் ஐக்கியம்

பிஎம் கிஸான்: விவசாயிகளுக்கு ஆக.2-இல் ரூ.20,500 கோடி விடுவிக்கிறாா் பிரதமா் மோடி

SCROLL FOR NEXT