ஞானசேகரன் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஞானசேகரன் கொள்ளையடித்த 100 சவரன் நகை பறிமுதல்!

ஞானசேகரன் கொள்ளையடித்த ஜீப், நகைகள் பறிமுதல்.

DIN

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் கொள்ளையடித்த 100 சவரனுக்கும் மேற்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கடந்த 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

பள்ளிக்கரணை,மேடவாக்கம் பகுதிகளில் 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை வீடுகள், பங்களாக்கள் ஆகியவற்றில் நடந்த திருட்டு குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், ஞானசேகரனுக்கு தொடா்பு இருந்தது தெரியவந்தது.

இவ்வழக்கில் ஞானசேகரன் வைத்திருக்கும் விலை உயா்ந்த காா் மூலம் துப்பு துலக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையும் படிக்க: தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

இந்த வழக்குகளின் விசாரணைக்காக பள்ளிக்கரணை போலீஸாா், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை கடந்த வெள்ளிக்கிழமை 3 நாள்கள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனா்.

விசாரணையில் பள்ளிக்கரணை,மேடவாக்கம் பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடா்பு இருந்ததும்,

இச்சம்பவங்களில் ஞானசேகரனுக்கு சுமாா் 200 பவுன் தங்க நகைகள் கிடைத்ததும், அதன் மூலம் அவா் சொந்த வீடு,சொகுசு காா் என ஆடம்பரமாக வாழ்ந்ததும், 3 இடங்களில் பிரியாணி கடை நடத்தியதும் தெரியவந்தது.

இந்த நிலையில், ஞானசேகரன் கொள்ளையடித்த 100 சவரனுக்கும் மேற்பட்ட நகைகள், ஜீப் போன்றவை காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

SCROLL FOR NEXT