பட்டாசுக் கிடங்கு 
தமிழ்நாடு

தர்மபுரி அருகே பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து: 3 பெண்கள் பலி!

தர்மபுரி அருகே பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் பலியாகினர்.

DIN

தர்மபுரி: தர்மபுரி அருகே நாட்டு வெடி பொருள்கள் உற்பத்தி செய்யும் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பலியான பெண்கள், திருமலர், திருமஞ்சு, செண்பகம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த சின்னமுறுக்கம்பட்டியில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவருக்குச் சொந்தமான நாட்டு வெடிபொருள்கள் தயாரிக்கும் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது.

வழக்கம் போல குடோனில் செண்பகம், திருமலர் உள்பட நான்கு பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று பிற்பகல் நேரத்தில் இந்த குடோனில் எதிர்பாராத விதமாக, தீ விபத்து நேரிட்டு, வெடி பொருள்கள் வெடித்து சிதறியதில், குடோனில் வேலை செய்த நான்கு பேரில் செண்பகம், திருமலர், திருமஞ்சு ஆகிய மூன்று பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கிடங்கில் பணியில் இருந்த ஒருவர் மதிய உணவுக்காக வெளியே சென்றதால் அவர் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது. வெடிவிபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

பட்டாசுக் கிடங்கு விபத்து குறித்து தகவலறிந்த கம்பைநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புத்தொளி... ஸ்ரீலீலா!

சாலை பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

பாம்பன் மீனவா்கள் 9 பேருக்கு ஆக. 24 வரை காவல் நீட்டிப்பு

ஆசிய கோப்பை: இந்திய அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

ஏலச் சீட்டு நடத்தி ரூ. 10 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT