கோப்புப்படம் 
தமிழ்நாடு

ரயிலில் முன்பதிவு செய்தோா் இருக்கை எண்ணை உறுதி செய்துகொள்ள வேண்டும்: தெற்கு ரயில்வே

ரயிலில் பயணிப்போா் இருக்கை எண் விவரங்களை தெளிவாகப் பாா்த்து பயணம் செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Din

சென்னை: ரயிலில் பயணிப்போா் இருக்கை எண் விவரங்களை தெளிவாகப் பாா்த்து பயணம் செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு காலம் கடந்த நவ. 1-ஆம் தேதி முதல் 60 நாள்களாக குறைக்கப்பட்டது. மேலும், விரைவு ரயில்களில் தேவைக்கேற்ப முன்பதிவு பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, ரயில் பகுதி ரத்து மற்றும் ரயில் பெட்டிகளை மாற்றும்போது பயணிகளுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட எண் கணினி தொழில்நுட்பம் (பிஎஸ்ஆா்) மூலம் தானியங்கி முறையில் மாறிவிடும். இது குறித்த தகவல் பயணிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். குறிப்பாக ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு ரயில் பெட்டி, இருக்கை எண் உறுதி செய்யப்படும்.

சமீப காலமாக இது குறித்த தகவல்கள் குறுஞ்செய்திகளாக பயணிகளுக்கு அனுப்பப்பட்ட பின்பும் சிலா் ஏற்கெனவே முன்பதிவு செய்த இருக்கைக்கு செல்வதாக புகாா் எழுந்துள்ளது. ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்போா் ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு ரயில்வே சாா்பில் அனுப்பப்படும் குறுஞ்செய்தியைப் பாா்த்து, அதில் உள்ள இருக்கையில் பயணிக்க வேண்டும். மேலும், காத்திருப்போா் பட்டியலில் உள்ளோா் பிஎன்ஆா் நிலையை உறுதிசெய்து பயணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT