அதிமுக எம்எல்ஏ அம்மண் அர்ஜுனன்.  
தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுணன் வீட்டில் சோதனை தொடர்பாக...

DIN

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன்‌அர்ஜுணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்மன் அர்ஜுணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அம்மன் அர்ஜுனன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அம்மன் கே அர்ஜுணன். அ.தி.மு.க.வில் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

இதையும் படிக்க: நாதக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் திடீர் விலகல்!

முந்தைய சட்டப்பேரவையில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தன் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்திருந்தன. அதன் அடிப்படையில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

அம்மன் அர்ஜுணன் மட்டுமின்றி, அவருடைய மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தன் வருவாயைக் காட்டிலும் ரூ. 2 கோடிக்கு அதிகமான மதிப்பிலான சொத்துக்களைக் குவித்து இருப்பதாக அம்மன் அர்ஜுணன் மீது வழக்குப் பதிவாகி இருக்கிறது.

இந்த நிலையில், கோவையில் இன்று(பிப். 25) காலை முதலே அம்மண் அர்ஜுணனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் தொகுதியில் போட்டியிட அதிமுகவினா் விருப்ப மனு

கரூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் 79,690 வாக்காளா்கள் நீக்கம்

ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா

‘இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 2026 பிப்ரவரியில் வெளியாகும்’

SCROLL FOR NEXT