முகப்பு
கனமழை
தமிழ்நாடு

கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழை!

எங்கெல்லாம் நாளை கனமழை பெய்யும்? வானிலை மையம் சொல்வதென்ன..

தமிழ்நாடு

கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழை!

எங்கெல்லாம் நாளை கனமழை பெய்யும்? வானிலை மையம் சொல்வதென்ன..

Updated On : 27 பிப்ரவரி, 2025 at 11:13 AM
கனமழை
பகிர்:

தமிழகத்தில் நாளை (பிப். 28)ல் பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிப்.28 (நாளை) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ,தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

01-03-2025: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை

பிப். 27, 28: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்று (27-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 - 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

மீனவர்கள்

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →