முதல்வர் ஸ்டாலின் - கமல்ஹாசன் சந்திப்பு. 
தமிழ்நாடு

முதல்வரை நேரில் சென்று வாழ்த்திய கமல்ஹாசன்!

முதல்வர் ஸ்டாலின் - கமல்ஹாசன் சந்திப்பு

DIN

முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

இது தொடர் கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதில்,”நாளை பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் மு.க. ஸ்டாலின் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன்.

தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் நாளை(மார்ச் 1) தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT